ஆர்.கே.பேட்டை அருகே விளையாட்டு மைதானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

ஆர்.கே.பேட்டை அருகே விளையாட்டு மைதானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து  ஆர்ப்பாட்டம்
X

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே நீர்நிலை மற்றும் மயான புறம்போக்கில் விளையாட்டு மைதானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தனி நபர் ஒருவர் மயானப் பகுதியை ஆக்கிரமிக்க ஏதுவாக விளையாட்டு மைதானம் அமைக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக்கூறி போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே நீர்நிலை மற்றும் மயான புறம்போக்கில் விளையாட்டு மைதானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம் கோபாலபுரம் ஊராட்சியில் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நீர்நிலை மற்றும் மயான புறம்போக்கு பகுதியில் ஊராட்ட்சி நிர்வாகம் சார்பில் விளையாட்டு மைதானம் அமைக்க ஏதுவாக 100 நாள் வேலை தொழிலாளர்கள் வைத்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. இருப்பினும் மயனாத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 150க்கும் மேற்ப்பட்ட கிராம பொதுமக்கள் ஒன்று திரண்டு மயனாப் பகுதியில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் போராட்டம் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அவினா, எரும்பி வருவாய் ஆய்வாளர் மோகன் பிரபு ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தனி நபர் ஒருவர் மயானப் பகுதியை ஆக்கிரமிக்க ஏதுவாக விளையாட்டு மைதானம் அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், இருப்பினும் பணி மேற்பார்வையாளர், தனி நபருக்கு ஆதரவாக செயல்ப்பட்டு தொழிலாளர்களை மிரட்டி பணி செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக குற்றம் சாட்டினர். மயானப் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைகக் கூடாது என்று வலியுறுத்தினர். பொதுமக்கள் போராட்டத்தின் எதிரொலியாக, நீர்நிலை மற்றும் மயானப் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்கும் முயற்சியை கைவிடப்படும் என்று அதிகாரிகள் உறுதி ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்