ஏரியில் நச்சுப்பொருட்கள் கலப்பு; குடிநீர் ஆதாரத்திற்கு கிராமமக்கள் அச்சம்

ஏரியில் நச்சுப்பொருட்கள் கலப்பு; குடிநீர் ஆதாரத்திற்கு கிராமமக்கள் அச்சம்
X

பைல் படம்.

ஆர்.கே. பேட்டை அருகே ரசாயனம் கலந்த கழிவு நீர் ஏரியில் கலந்து குடிநீர் ஆதாரம் கெடுவதாக கிராமமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஆர்.கே. பேட்டை அருகே தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த கழிவு நீரால் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரியில் கலப்பதால் கிராமமக்கள் அச்சமடைந்து திருத்தணி கோட்டாட்சியரிடம் புகாரளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே. பேட்டை அருகே பாலாபுரம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமங்களுக்கு அங்குள்ள ஏரி பிரதான நீராதாரமாக உள்ளது.

அப்பகுதியில் 20ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் தனியாருக்கு சொத்தமான தோல் மற்றும் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுநீர் நச்சுப்பொருட்களை பாலாபுரம் ஏரியில் கலந்து விடுகிறது.

இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு குடிநீர் மாசடைந்து வருவதாகவும் பொதுமக்கள் மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு, மஞ்சள்காமாலை, தோல் வியாதி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது. ஓடை கால்வாய் ஆக்கிரமிப்பு, சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு சட்டத்துக்கு விரோதமாக செயல்படும் தொழிற்சாலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி திருத்தணி கோட்ட ஆட்சியரிடம் கிராம பொதுமக்கள் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

உடனடியாக தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் கிராம மக்களுக்கு உறுதியளித்தார்.

Tags

Next Story
why is ai important to the future