திருத்தணி அருகே பழுதடைந்த ஊராட்சி ஒன்றிய சாலையை சீரமைக்க கோரிக்கை

திருத்தணி அருகே மோசமான நிலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய சாலை.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், செருக்கனுார் கிராமத்தில் இருந்து சாமந்திபுரம். பங்களா வரை, மூன்று கிலோ மீட்டர் தூரம் ஒன்றிய தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இச்சாலை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைத்து தார்ச்சாலை அமைக்கப்பட்டது. சாமந்திபுரம் பங்களா பகுதியில் இருந்து வாகன ஓட்டிகள் சோளிங்கர் மற்றும் திருத்தணி மார்க்கத்திற்கு மாநில நெடுஞ்சாலை செல்கிறது.
இதனால் மேற்கண்ட ஒன்றிய சாலையில் அதிகாலை, 4 மணி முதல் நள்ளிரவு,11 மணி வரை இரு சக்கர வாகனங்கள், கார், வேன் போன்ற வாகனங்கள் சென்றவாறு இருக்கும். இந்நிலையில் தார்ச்சாலையை முறையாக பராமரிக்காததால் தற்போது குண்டும், குழியுமாக மாறியுள்ளது.குறிப்பாக செருக்கனுார் ஏரிக்கரை தார்ச்சாலை ஆங்காங்கே ஒரு அடி ஆழத்திற்கு மேல் பள்ளம் ஏற்படும், ஜல்லிகள் பெயர்ந்துள்ளதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றது.
இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் பள்ளத்தில் தவறி விழுகின்றனர். இச்சாலையை சீரமைக்க வேண்டும் என பலமுறை ஒன்றிய நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலனை கருதி மாவட்ட கலெக்டர் தார்ச்சாலை சீரமைப்பதற்கு நிதி ஓதுக்கீடு செய்து பணிகள் விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu