ரயில் தண்டவாளத்தில் சிதறிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை

ரயில் தண்டவாளத்தில் சிதறிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

திருத்தணி அருகே ரயில் தண்டவாளத்தில் சிதறிய நிலையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, சிங்கராஜபுரம் கிராமத்தில் பகுதியில் வசித்து வருபவர் ஜீவானந்தம் மகன் தோனேஷ்வரன்(20), தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு சுகாதார ஆய்வாளர் படிப்பு படித்து வருகிறார். இவர் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாக என கூறப்படுகிறது.

இந்நிலையில், திருத்தணி பொன்பாடி ரயில் நிலைய தண்டவாளத்தில் தோனேஷ்வரன் உடல் சிதறிய நிலையில் சடலமாக கிடந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த திருத்தணி காவல் துறையினர், தோனீஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் ரயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் வேறு சமுதாய பெண்ணை காதலித்த விவகாரத்தில் அவரை யாராவது அடித்து கொலை செய்தாரா? அல்லது அவர் காதல் பிரச்சனையில் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags

Next Story