திருத்தணி; மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு பேரணி

திருத்தணியில் மின்சார பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருத்தணியில் மின்சார பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், காஞ்சி மின்பகிர்மான வட்டம் சார்பில், கடந்த, 14 ம் தேதி முதல் நேற்று (19-ம் தேதி) வரை மின்சிக்கன வார விழா கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் திருத்தணி மின்வாரிய கோட்டம் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் மின்சிக்கனம் மற்றும் மின்பாதுகாப்பு குறித்து மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.
திருத்தணி கோட்ட மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், ஜி.ஆர்.டி.,பொறியியல் கல்லுாரி மாணவிகள், என 300-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.
இதில் திருத்தணி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் பாரிராஜ் பங்கேற்று, விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். பேரணி திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையில் இருந்து அரக்கோணம் சாலை, ம.பொ.சி.சாலை, அக்கைய்யாநாயுடு சாலை வழியாக கமலா தியேட்டர் வரை பேரணி நடந்தது.
பேரணியில் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் மாணவியர் மின்சிக்கனம் மற்றும் மின்சாரம் பாதுகாப்பு குறித்து வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் கையில் ஏந்தி கோஷ்மிட்டவாறும், துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் மின்வாரிய உதவி கோட்டா பொறியாளர்கள் ராஜேந்திரன், கோட்டீஸ்வரி, இளநிலை பொறியாளர்கள் வேண்டாமிர்தம், தமிழரசன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu