தனியார் தொழிற்சாலை பேருந்து பனை மரத்தில் மோதி ஓட்டுனர் உயிரிழப்பு

தனியார் தொழிற்சாலை பேருந்து பனை மரத்தில் மோதி ஓட்டுனர் உயிரிழப்பு
X

விபத்தில் உயிரிழந்த டிரைவர் கேசவன்.

திருத்தணி அருகே பணியாளர்களை ஏற்றி சென்ற தனியார் தொழிற்சாலை பேருந்து பனை மரத்தில் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து பனை மரத்தில் மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார். பேருந்தில் பயணம் செய்த ஐந்து பெண் பணியாளர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை தாலுகா சின்ன நாகபூண்டி அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து ஒன்று ஆர்.கே. பேட்டை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு சென்று மாலையில் திரும்பி செல்வது வழக்கம். இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து புறப்பட்டது. பேருந்தை ஆர்கே பேட்டையை சேர்ந்த கேசவன் (வயது 29) என்பவர் இயக்கினார்.

திருவள்ளுவர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை தாலுகா சின்ன நாகபூண்டி கிராமம் அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சோளிங்கரிலிருந்து பொன்னை செல்லும் நெடுஞ்சாலை ஓரமாக இருந்த பனை மரத்தில் நிலை தடுமாறி பனை மரத்தில் மோதி நின்றது. இதில் சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் கேசவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த ஓட்டுனர் கேசவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் மகாலட்சுமி,ரித்திகா ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். மேலும் சுவாதி, கௌசல்யா, நிஷா, மேனகா ஆகியோர் சிறு காயங்களுடன் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து ஆர்.கே. பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு