திராவிட கட்சிகள் இல்லாத ஆட்சியை கொண்டு வர மக்கள் தயாராகி விட்டனர். அன்புமணி பேச்சு…

திராவிட கட்சிகள் இல்லாத ஆட்சியை கொண்டு வர மக்கள் தயாராகி விட்டனர். அன்புமணி பேச்சு…
X

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ். (கோப்பு படம்).

தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாத ஆட்சியை கொண்டு வர மக்கள் தயாராகி விட்டனர் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சட்டமன்ற தொகுதி பாமக சார்பில், திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் பாமக கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாநில துணைத் தலைவர் டாக்டர் வைத்தியலிங்கம் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில், பாமக மாவட்ட செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான தினேஷ்குமார், மாவட்ட தலைவர் விஜயன் ஆகியோர் வரவேற்றுப் பேசினர். முன்னாள் எம்எல்ஏ ரவிராஜ், பாலயோகி, ஒன்றிய கவுன்சிலர் வெங்கடேசன், மணவூர் பூபதி, செல்வம், குப்புசாமி, ராதா, பொன்ஜோதி குமார், பாலாஜி, உலகநாதன், தருமா, மதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசியதாவது:

தமிழ்நாட்டில் கடந்த 54 ஆண்டுகளாக திராவிட கட்சிகளின் ஆட்சியில் மக்களுக்கு எவ்வித நன்மைகளையும் செய்யவில்லை. திராவிட ஆட்சி என்று கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். இந்த திராவிட ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் தயாராகிவிட்டனர்.

புதிய சிந்தனங்களையும், திட்டங்களையும் கொண்டு வர பாமகவிற்கு ஒரு வாய்ப்பு தர மக்கள் முடிவு செய்து விட்டார்கள். ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிய நிலையில் 142 நாட்கள் காலம் தாழ்த்தி திரும்பி அனுப்பிய ஆளுநருக்கு கண்டன தெரிவித்துக் கொள்கிறேன்.

இடைப்பட்ட காலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இறந்த 18 பேர் குடும்பத்திற்கு ஆளுநர் பதில் சொல்ல வேண்டும். சென்னை மாநகர பேருந்துகள் தனியார் மையம் திட்டம் கைவிட்டு பேருந்துகள் எண்ணிக்கை இரு மடங்களாக உயர்த்தி பெண்களுக்கு அனைத்து பேருந்துகளிலும் இலவச பேருந்து சேவை உறுதிப்படுத்திட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் 80 சதவீதம் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட சட்ட மசோதா கொண்டு வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் பேசினார். நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட செயலாளர் மணி, ஒன்றிய கவுன்சிலர் விநாயகம், கார்த்திக், பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் சேகர் நன்றி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!