திருவலங்காடு அரசு மருத்துவமனையில் கால் கடுக்க காத்திருந்த நோயாளிகள்!

திருவலங்காடு அரசு மருத்துவமனையில் கால் கடுக்க காத்திருந்த நோயாளிகள்!
X

திருவலங்காடு அரசு மருத்துவமனையில் நீண்ட நேரம் காத்திருக்கும் நோயாளிகள்

திருவலங்காடு அரசு மருத்துவமனைக்கு மருத்துவர் உரிய நேரத்தில் வராததால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்த அவலம் ஏற்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நோயாளிகள் மற்றும் கொரோனா சோதனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவம் பார்க்க வந்த சிலர் நீண்ட நேரமாக மருத்துவமனை வாசலிலேயே காத்திருந்தனர்.

இதில் கர்ப்பிணிகளும், இதுதவிர கொரோனா சோதனைக்கு வந்தவர்களும் உடனிருந்தனர். மருத்துவம் பார்க்காமல் வெளியிலேயே நோயாளிகளை நிற்க வைத்து உள்ளீர்கள் என மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த செவிலியரிடம் கேட்டுள்ளனர்.

அப்போது அவர் டாக்டர் இன்னும் வரவில்லை, கொரோனா நேரம் ரயிலில் வருகிறார் எனவும், வந்தவுடன் டாக்டர் பார்ப்பார் காத்திருங்கள் என அலட்சியமாக பதில் அளித்துள்ளார் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!