ஒன்றிய ஆணையருக்கு அதிமுக ஒன்றிய குழு தலைவர் எதிர்ப்பு

ஒன்றிய ஆணையருக்கு அதிமுக ஒன்றிய குழு தலைவர் எதிர்ப்பு
X

பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 

பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு அதிமுக ஒன்றிய குழு தலைவர் எதிர்ப்பு

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஜான்சிராணி விஸ்வநாதன் பணியாற்றி வந்தார். அவர் மீது திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்த 9 ஒன்றிய கவுன்சிலர்கள் கடந்த மாதம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தனர்.

ஒன்றியத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 12 ஒன்றிய கவுன்சிலர்களில் ஒருவர் இறந்து விட்ட நிலையில் 11 பேரில் 9 பேர் ஒன்றிய குழு தலைவருக்கு எதிராக திருத்தணி கோட்டாட்சியர் சத்திய தலைமையில் நடைபெற்ற நம்பிக்கையில்லா திர்மானத்தில் கலந்துக் கொண்டனர்.

இருப்பினும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி ஒன்றியத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களில் ஐந்தில் நான்கு பங்கு இருந்தால் மட்டுமே கூட்டத்தை நடத்த முடியும் என்ற காரணத்தால் போதிய கோரம் இல்லை என்று கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது உள்ள உறுப்பினர்களில் 5ல் 4 பங்கு கணக்கிடு செய்தால் 9 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் போதுமானது என்று ஒன்றிய குழு உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக கடிதம் வழங்கியதின் பேரில்ஊரக வளர்ச்சி துறை செயலாளருக்கு கோட்டாட்சியர் கடிதம் அனுப்பி, அது பரிசீலனையில் உள்ளது. துறை சார்ந்த நடவடிக்கை முடியும்வரை ஒன்றிய குழு கூட்டத்தை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் பசுபதி தகவல் தெரிவிப்பதில்லை என்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய தலைவரை அணுகாமல் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஆளும் கட்சி பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் ரவீந்திரா பரிந்துரையை ஏற்று ஊராட்சி ஒன்றிய ஆணையர் செயல்படுவதாக நேற்று செய்தியாளரிடம் ஒன்றியக்குழு அதிமுக பெண் தலைவர் ஜான்சிராணி குற்றம்சாட்டினார்.

இருப்பினும், ஒன்றியக் குழு தலைவரின் குற்றச்சாட்டுக்களை 9 ஒன்றிய குழு உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான தங்களின் எழுத்துப்பூர்வமான புகார் துறை சார்ந்த செயலாளரிடம் நிலுவையில் இருப்பதால், ஒன்றிய குழு தலைவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் மேலும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளும் போது சட்டமன்ற உறுப்பினர் ஆலோசனை பெற்று செயல்படுவது தவறில்லை என்றும் திட்டமிட்டு ஒன்றிய ஆணையர் மீது பொய் புகார்கள் கூறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.

ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளித்த ஊராட்சி ஒன்றிய ஆணையர் பசுபதி கூறுகையில்.. அரசின் திட்டங்கள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் சட்டமன்ற உறுப்பினர் ஆளும் கட்சி பிரமுகர்களின் கோரிக்கைகள் பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பது தவறு இல்லை என்று தெரிவித்தார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil