அரசு வழங்கிய ஆதிதிராவிடர் இடங்கள் ஆக்கிரமிப்பு; மீட்டுத்தர மக்கள் உண்ணாவிரதம்
கிளாம்பாக்கம் கிராமத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
திருவள்ளூர் மாவட்டம், திருவலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளாம்பாக்கம் கிராமத்தில் 1998ஆம் ஆண்டு தமிழக அரசின் வருவாய்த்துறை சார்பில் காளம்பாக்கம் கிராமத்தில் நில எடுப்பு செய்து 35 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
அந்த இடத்தில் 28 நபர்கள் வீடுகட்டிக் குடியேறிவிட்ட நிலையில் மீதமுள்ள 7 நபர்களில் பட்டா நிலத்தை அப்பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து, குட்டி வீடுகளுக்கு வழியும் விடாமல் மீதமுள்ள 7 பேரை வீடு கட்ட விடாமலும் பல ஆண்டுகளாக தடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இது இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனுவை கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் வீடு கட்டிய குடும்பத்தினர் 30க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் தரையில் அமர்ந்து உண்ணா விரத போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி ஆதி திராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் தேவி அங்கு நேரில் வந்து அவரிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து மக்கள் தேசம் கட்சி நிர்வாகி கூறும்போது, அரசு ஆதிதிராவிடர்களுக்கு கொடுத்த இடத்தை பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்களிடம் இருந்து மீட்க நாங்கள் போராடி வருகிறோம். இதற்காக எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. இனிமேலும் அவர்கள் மீட்டு தரவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் பெரிய அளவில் செய்வோம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu