ஆரூரம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா..!
ஆரூரம்மன் கோயில் ஜாத்திரை திருவிழா
சின்ன மண்டலி கிராமத்தில் பழமைவாய்ந்த ஆரூரம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா.கிராம மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த சின்ன மண்டலி கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆரூரம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலின் ஜாத்திரை திருவிழா கடந்த 19ஆம் தேதி காப்பு கட்டலுடன் துவங்கி ஏழு நாட்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
விழாவின் உச்சக்கட்டமாக இன்று ஜாத்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.முன்னதாக ஊர் எல்லையிலிருந்து மேளதாளம் முழங்க வீதிகளில் வலம்வந்த ஆரூரம்மனை கிராம மக்கள் மஞ்சள் நீராட்டி உற்சாகத்துடன் வரவேற்றனர்.இதனை தொடர்ந்து எட்டு நாட்களாக விரதமிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேங்காயை தரையில் உருட்டியபடி கோவிலுக்கு ஊர்வலமாக வந்து தேங்காயை உடைத்து கிராம தேவதையான ஆரூரம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதையடுத்து தீப்பந்தம் ஏந்தியபடி பக்தர்கள் புடைசூழ கையில் நெய்விளக்கேந்தியபடி போலாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்..இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற பாகசாலை விழாவில் ஏராளமான பக்தர்கள் இடுப்பில் ஊசி நூல் குத்தியபடி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.மிகவும் விமரிசையாக நடைபெற்ற இவ்விழாவில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து ஆரூரம்மனை வழிபட்டு சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu