திருத்தணி புதிய பேருந்து நிலைய பணிகள் நகர மன்ற தலைவர், அதிகாரிகள் ஆய்வு

திருத்தணி புதிய பேருந்து நிலைய பணிகள்   நகர மன்ற தலைவர், அதிகாரிகள் ஆய்வு
X

திருத்தணி புதிய பஸ்ஸ்டாண்ட் கட்டுமானப்பணியை ஆய்வு செய்த நகராட்சி தலைவர் மற்றும் கமிஷனர். 

New Bus Stand Work Inspection புதிய நவீன பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் நகர்மன்ற தலைவர் தெரிவித்தார்.

New Bus Stand Work Inspection

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு திட்ட பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. அந்த பணிகளை அவ்வப்போது அதிகாரிகளும் பொறுப்பில் உள்ளவர்களும் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதனையொட்டி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் நடக்கும் பணிகளை அந்தந்த அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி திருத்தணி அருகே புதிய பஸ்ஸ்டாண்ட் கட்டுமான பணியினை நகராட்சி தலைவர் மற்றும் கமிஷனர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

New Bus Stand Work Inspection


திருத்தணியில் நடந்து வரும் புதிய பஸ்ஸ்டாண்ட் கட்டுமான பணியினை ஆய்வு செய்த நகராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் நிர்வாகிகள்.

திருத்தணியில் நடைபெற்று வரும் புதிய நவீன பேருந்து நிலையத்தை நகர மன்ற தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

திருவள்ளூர் மாவட்டம்,திருத்தணி நகராட்சி அலுவலகம் பின்புறத்தில் உள்ள அண்ணா பேருந்து நிலையம் மற்றும் ம.பொ.சி.சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள் தடுக்கும் வகையில் அரசு போக்குவரத்து பணிமனை அருகே, கடந்தாண்டு, அமைச்சர் நேரு, 12.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நவீன பேருந்து நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நட்டு பணிகளை துவக்கி வைத்தார். தற்போது புதிய பேருந்து நிலைய பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த பணிகளை நடைபெறும் இடத்தில் திருத்தணி நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி, ஆணையர் அருள் ஆகியோர் கட்டுமான பணிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது ஒப்பந்ததாரர் மற்றும் நகராட்சி பொதுப்பணி மேற்பார்வையாளர் நாகராஜ் ஆகியோரிடம் நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி புதிய பேருந்து நிலைய பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின் போது, நகராட்சி பொறியாளர் விஜயகாமராஜ் நகர்மன்ற கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story