3.47 கோடி மதிப்பீட்டில் 14 வகுப்பறை கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை

திருத்தணி அடுத்த மத்தூர் கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள வகுப்பறை கட்டிடத்திற்கான பூமி பூஜையில் எம்எல்ஏ பங்
கேற்றார்.
New Building Construction Boomi Pooja
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் மத்தூர் ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 700-கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் போதிய வகுப்பறை வசதி இல்லாததால் மாணவர்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். மாணவர்களுக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித் தர வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3.47 கோடி மதிப்பீட்டில் 14 வகுப்பறை கொண்ட புதிய கட்டிடம் பொதுப்பணித்துறை மூலமாக கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் திருத்தணி எம்எல்ஏ., சந்திரன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்தும் அடிக்கல் நாட்டியும் பணிகளை தொடங்கி வைத்தார். இதன் முன்னதாக அகூர் ஊராட்சியில் 39.68 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் கட்டுதற்கான பணிகளை அடிக்கல் நாட்டில் பணி துவக்கி வைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu