பள்ளிப்பட்டு அருகே பெண்களுக்கு இலவச தையல் மற்றும் கணினி பயிற்சி

பள்ளிப்பட்டு அருகே  பெண்களுக்கு இலவச தையல் மற்றும் கணினி பயிற்சி
X

பள்ளிப்பட்டு அருகே பெண்களுக்கு இலவச தையல் மற்றும் கணினி பயிற்சி துவக்கி வைக்கப்பட்டது.

Sewing Classes -பள்ளிப்பட்டு அருகே பெண்களுக்கு இலவச தையல் மற்றும் கணினி பயிற்சி வகுப்பு துவக்கி வைக்கப்பட்டது.

Sewing Classes -திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரிப்பேட்டையில் மத்திய அரசின் தீன தயாள் உபாத்யாய கெளசல்யா கிராமீன யோஜனா திட்டத்தின் கீழ் கேர்ஸ் அமைப்பு சார்பில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி, கணினி பயிற்சி மற்றும் ஆங்கில பேச்சு பயிற்சி வழங்கப்படுகின்றது. இப் பயிற்சி பள்ளி பெண்களுக்கு சீருடை கேர்ஸ் அமைப்பாளர் மோகன்ராஜு வழங்கி பேசுகையில் கிராமபுற பெண்கள் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் மத்திய அரசின் (டிடியுஜிகிஒய்) திட்டத்தின் கீழ் 18வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு மூன்று மாதங்கள் இலவசமாக தையல், கணினி பயிற்சியுடன் ஆங்கில பயிற்சி வழங்கப்படுகின்றது. பயிற்சி காலத்தில் தங்கி பயிற்சி பெற இலவசமாக தங்குமிடம், உணவு வழங்கப்படுகின்றது. பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று தெரிவித்தார். கொடிவசலா சாலையில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் செயல்பட்டு வரும் இத் திட்டத்தின் மூலம் பெண்கள் பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story