பொங்கல் திருவிழாவையொட்டி முருகப்பெருமான் திருவீதி உலா

Murugan Thiru Veethi Ula
திருத்தணியில் பொங்கல் விழாவை ஒட்டி மலைக் கோவிலில் இருந்து முருகப்பெருமான் திருவீதி உலா நிகழ்ச்சி திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Murugan Thiru Veethi Ula
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ஆண்டுதோறும் நடக்கும் பொங்கல் திருவிழா ஓட்டி, மூன்று நாட்கள் திருத்தணியில் உற்சவர் முருகப்பெருமான்,வள்ளி, தெய்வானையுடன் மலைக்கோவிலில் இருந்து இறங்கி வீதிகள் தோறும் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அதன்படி, பொங்கல் நாளில்(15ம் தேதி முதல் நாள்) மலைக்கோவில் பின்புறம் உள்ள அர்ச்சகர் வசிக்கும் பகுதிகளில் உள்ள வீதிகளில் உற்சவர் முருகப்பெருமான் வலம் வந்து அருள்பாலித்தார்.நேற்று முன்தினம்(16ம் தேதி இரண்டாம் நாள்) மேல்திருத்தணி பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Murugan Thiru Veethi Ula
இன்று (மூன்றாம் நாள்) காலை, 6:00 மணிக்கு படிகள் வழியாக, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சன்னதி தெருவில் உள்ள கோவில் ஆணையர் குடியிருப்பு முன், அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் எழுந்தருளினார்.
பின்னர், அங்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 8:00 மணிக்கு திருத்தணி பெரியதெரு சுமைதாரர்கள் மாட்டு வண்டியில் உற்சவ பெருமானை, நகரம் முழுவதும் உள்ள வீதிகளுக்கு அழைத்து சென்றனர்.மாலை, 5:30 மணிக்கு பழைய பஜார் தெரு அருகில் உள்ள ரெட்டிகுளம் என்கின்ற சண்முகதீர்த்தக்குளம் மண்டபத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
இரவு, 8:30 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் மீண்டும் மலைக் கோவிலுக்கு சென்றார். உற்சவர் முருகர் திருவீதியுலா வருவதையொட்டி நகர் முழுவதும் பெண்கள் தெருக்களில் வண்ண, வண்ண கோலங்கள் போட்டும், தேங்காய் உடைத்து பூஜை செய்து வழிப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu