போக்குவரத்து பணிமனை கிளை அலுவலரிடம் மனுக்களை வழங்கிய எம்எல்ஏ

போக்குவரத்து பணிமனை கிளை அலுவலரிடம் மனுக்களை வழங்கிய எம்எல்ஏ
X

 திருத்தணி போக்குவரத்து பணிமனை கிளை மேலாளரிடம் மனுக்களை வழங்கிய எம்எல்ஏ சந்திரன்.

பொதுமக்களிடம் இருந்து பெற்ற மனுக்களை போக்குவரத்து பணிமனை கிளை அலுவலரிடம் எம்எல்ஏ சந்திரன் வழங்கினார்.

திருத்தணி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய பேருந்து வழித்தடங்களை இயக்க எம்எல்ஏ சந்திரனை சந்தித்து பொதுமக்கள் மனு கொடுத்திருந்தனர். இந்த மனுக்களை திருத்தணி போக்குவரத்து பணிமனை கிளை மேலாளரிடம் எம்எல்ஏ சந்திரன் கொடுத்து மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கூறினார். அவர்களுடன் திருத்தணி ஒன்றிய செயலாளர் ரவி, ஆர்கே பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனி, பொதட்டூர்பேட்டை பேரூர் செயலாளர் டி.ஆர்.கே பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!