திருத்தணி நகராட்சியில் சைக்கிளில் சென்று எம்எல்ஏ சந்திரன் வாக்களிப்பு

திருத்தணி நகராட்சியில் சைக்கிளில் சென்று எம்எல்ஏ சந்திரன் வாக்களிப்பு
X

திருத்தணி நகராட்சியில் சைக்கிளில் சென்று. வாக்களித்த எம்.எல்.ஏ சந்திரன்.

திருத்தணி நகராட்சியில் எம்எல்ஏ சந்திரன் சைக்கிளில் சென்று வாக்களித்து, பலரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதியில் இன்று காலை 7 மணி முதலே, வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று, ஆர்வமுடன் காத்திருந்து, வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருத்தணி எம்.எல்.ஏ எஸ்.சந்திரன், தனது ஜனநாயகக்கடமையை பதிவு செய்ய, 2. கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிள் மிதித்து சென்று, ரயில் நிலையம் எதிரில் உள்ள, ஆலமரத்து தெரு அரசு பள்ளியில் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தார். அங்கு நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். சைக்கிளில் வந்த எம்.எல்.ஏ. சந்திரனின் செயலை பலரும் ஆச்சரியத்துடன் பாராட்டினர்.

Tags

Next Story