கருணாநிதி நினைவு தினத்தையொட்டி நோயாளிகளுக்கு எம்எல்ஏ., உதவி

கருணாநிதி நினைவு தினத்தையொட்டி  நோயாளிகளுக்கு  எம்எல்ஏ., உதவி
X
கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருத்தணி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு எம்எல்ஏ உதவி செய்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 3ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் மற்றும் திருத்தணி மேற்கு ஒன்றிய பொருளாளர் திருத்தணி எம். பூபதி திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை நேற்று நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினர்.

இதனைத்தொடர்ந்து அவர்களுக்கு பால், பழம், மற்றும் ரொட்டி அடங்கிய உணவுப் பொருட்களை வழங்கினர். இதில் திருத்தணி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி