திருத்தணி: சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சேகர் பாபு

திருத்தணி: சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த  அமைச்சர் சேகர் பாபு
X

திருத்தணி  சுப்பிரமணியசுவாமி திருக் கோவிலில் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சீரமைப்புப் பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தந்து பக்தர்களின் வசதிக்காக கம்பிவட வசதி மற்றும் 2வது மலை பாதை அமைத்தது, கோவில் குளத்தினை தூர்வாரி சீரமைப்பது உள்ளிட்டவை குறித்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிகழ்வில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர்சந்திரன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரர் மற்றும் திமுக திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம். பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!