1,907 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கிய அமைச்சர் காந்தி
பள்ளிப்பட்டில் நடந்த நிகழ்வில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் காந்தி வழங்கினார்.
பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் 1907 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் .காந்தி வாங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்குட்பட்ட பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 1907 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியம் பொதட்டூர் பேட்டை பேரூராட்சியில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியர் தா. பிரபு சங்கர் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் .காந்தி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கி பேசினார். அப்பொழுது பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நல திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருவதாகவும் அந்த வகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவில் பல இடங்களில் சிறப்பு பட்டா வழங்கும் முகாம்கள் நடத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.அதன் பேரில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பயனாளிகளை தேர்வு செய்து வழங்கப்படுகிறது என சிறப்புரையாற்றினார்.
இதில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் ஆர்.டி.ஓ. தீபா, வட்டாட்சியர் பரமசிவம், தனி வட்டாட்சியர் மணிவாசகம் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ரவீந்திரன், சீனிவாசன், பி.டி. சந்திரன், பள்ளிப்பட்டு பேரூராட்சி கழக செயலாளர் எம் .ஜே. ஜோதி குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுகுமார், வருவாய் ஆய்வாளர்கள் கணேஷ்குமார், ராமு, மற்றும் வருவாய்த் துறையினர் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu