பிரம்மா,விஷ்ணு,சிவன் மும்மூர்திகளை ஏகபாத மூர்த்தி தோற்றத்தில் கிளைகள் வடிவமைப்பு

மஹாசிவராத்திரிக்காக வடிவமைக்கப்பட்டுள்ள அகோரி தத்ரூப சிலைகள் .
Maha Sivarathiri Statues Arrangement
மஹா சிவராத்திரி விழா வரும் 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் நகரி அருகே சந்திர மெளலீஸ்வரர் ஆலயத்தில் சிவன், பிரம்மா,விஷ்ணு, சிவன் மும்மூர்திகளை ஏகபாத மூர்த்தி தோற்றத்தில் சிலை வடிவமைப்பு. மண்டை ஓடு மீது சிவப்பெருமான், மற்றும் அகோரிகள் தியானம் செய்வது போல் அமைக்கப்பட்டுள்ள தோற்றம் பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே ஆந்திர எல்லை பகுதியில் அமைந்துள்ள நகரி கீளப்பட்டு பகுதியில் சிறப்பு பெற்ற அருள்மிகு திரிபுர சுந்தரி சமேத சந்திர மெளலீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் மஹா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வருகின்ற 8ம் தேதி மஹா சிவராத்திரி முன்னிட்டு ஆலயத்தின் அருகில் உள்ள நாக, ஐஸ்வர்ய தீர்த்த குளத்தில் 10 அடி உயரத்தில் தென்னை ஓலையினால் செய்யப்பட்டுள்ள லிங்கத்தினுள் ருத்ராட்சம், துளசி, தாமரை மணிகளால் 9 அடி உயரத்தில் ஏகபாத மூர்த்தி சிலையில் மஹா விஷ்ணு,பிரம்மா, சிவன் காட்சி தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Maha Sivarathiri Statues Arrangement
மேலும் மண்டை ஒடு மீது சிவப்பெருமான் தியான நிலையில் இருக்க சுற்றி அகோரிகள் தியானம் செய்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. ஏகபாத மூர்த்தி சிலையை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மற்றும் கிராம இளைஞர்கள் ஒருமாதம் உழைத்து சிலை வடிவமைத்ததாகவும், சிவப்பெருமான் ஒரே காலில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூன்று அவதாரங்களில் ஒரே நேரத்தில் காட்சி தருவதே ஏகபாத மூர்த்தியின் சிறப்பு என்றும் கோயில் நிர்வாகி சுப்பிரமணி தெரிவித்தார். மஹா சிவராத்திரி முன்னிட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu