திருவாலங்காடு வினை தீர்க்கும் விநாயகர், பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திருவாலங்காடு வினை தீர்க்கும் விநாயகர், பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
X

திருத்தணி அடுத்த திருவாலங்காடு வினை தீர்த்த விநாயகர் மற்றும் பத்ரகாளி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருத்தணி அருகே திருவாலங்காட்டில் நடைபெற்ற வினை தீர்க்கும் விநாயகர் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருத்தணி அடுத்த திருவாலங்காடு வினை தீர்த்த விநாயகர் மற்றும் பத்ரகாளி அம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோவில் உடன் இணைந்த திருவாலங்காடு பத்ரகாளி அம்மன் திருக்கோவிலில் மற்றும் வினை தீர்த்த விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்காக திருக்கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து பூஜைகளுடன் தொடங்கி கணபதி ஹோமம், லட்சுமி பூஜை, கோ பூஜை, பூர்ணாகதி, பூர்ண கும்ப ஹோமம் நடைபெற்றது . இதனைத் தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட கலசங்களில் இருந்த புனித நீர் மேல தாளங்கள் முழங்க கோவில் சுற்றி வலம் வந்து பின்னர் பத்ரகாளி அம்மன் திருக்கோவில் கோபுரத்தின் மீதுள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

கும்பாபிஷேகம் நடைபெற்ற போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ஓம் சக்தி, ஓம் சக்தி என்று பக்தி பரவசத்துடன் கோஷங்களை எழுப்பியவாறு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து மூலவருக்கு பால், தயிர், சந்தனம், ஜவ்வாது, இளநீர், தேன், பன்னீர் உள்ளிட்ட நறுமண திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களாலும், திரு ஆவணங்களால், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபராதனை காண்பிக்கப்பட்டது கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு திருக்கோவில் சார்பில் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Next Story
மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் AI பற்றி நீங்களும்  தெரிந்து கொள்ளுங்கள்!