பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்று தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது: போக்குவரத்து துண்டிப்பு

பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்று தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது: போக்குவரத்து துண்டிப்பு
X

வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்ட கொசஸ்தலை ஆற்று தரைப்பாலம் 

பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு. உயர்மட்ட மேம்பாலம் கட்ட அரசுக்கு கோரிக்கை.

திருத்தணி பள்ளிப்பட்டு அருகே அம்மா பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரநீரால் சேதமான தரை பாலம் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெளியே செல்ல முடியாமல் தவிப்பு.

திருவள்ளூர் மாவட்டத்தில் சமீப காலமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மேலும் மிக்ஜம் புழல் காரணத்தால் திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே சுரக்காய் பேட்டை, நெடியா, கீரை பொடி, காவராஜ் பேட்டை, மேல கொடி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 30,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

மேற்கண்ட கிராமங்களுக்கு செல்ல அம்மம்பள்ளி அணையில் இருந்து திரிந்து விடப்படும் தண்ணீர் ஆனது லவ,குசா ஆற்றின் வழியாக கொசத்தலை ஆற்றில் வந்து சேரும்.

மேற்கண்ட கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு பள்ளிகளுக்கு மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல சம்பந்த வாடா கிராமம் பகுதியில் உள்ள ஆற்றின் குறுக்கே மக்கள் கடந்து செல்ல தரைப்பாலம் ஒன்று உள்ளது. இந்தத் தரை பாலம் வழியாக திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருவார்கள். இந்த நிலையில் தொடர்ந்து மூன்று நாள் மழை செய்து வந்த நிலையில் ஆந்திர மாநிலம் அம்மா பள்ளி அணை நிரம்பி உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி.நேற்று இரவு சுமார் வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் தற்போது தொடர் மழை காரணமாக தரைப்பாலம் மூழ்கியுள்ள நிலையில் அப்பகுதி சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மக்கள் வெளியேற முடியாமல். போக்குவரத்து இன்றி சுமார் 10.கிலோ மீட்டருக்கு மேலாக சுற்றி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் அம்மம்பள்ளி அணை நிரம்பியதால் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது இதன் காரணமாக தங்கள் பயன்படுத்தி வந்த மண் தரைப்பாலம் முற்றிலும் அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் வாங்கக்கூட வழியின்றி தவித்து வருகிறோம். அப்படி மீறி செல்ல வேண்டுமென்றால் சுமார் 10 கிலோ மீட்டர் மேலாகவே சுற்றுச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

எங்கள் பகுதிக்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டித் தர பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் தாங்கள் நிலைமை மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பருவ மழைக்காலங்களில் தாங்கள் நிலைமை இவ்வாறு தான் இருந்து வருகிறது. எனவே அடுத்த பருவமழைக்கும் முன்பு தங்களுக்கு உயர் மட்ட மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
நா.த.க. வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு