இளம் பெண்ணை கடத்தி திருமணம்: போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது

இளம் பெண்ணை கடத்தி திருமணம்: போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது
X

பைல் படம்

திருத்தணி அருகே காதலிப்பதாக இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

திருத்தணி அருகே(16) வயது இளம் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக வாலி வரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்ற தீர்ப்பின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதி ஆர்.கே.பேட்டை தாலுகா அம்மையார்குப்பம் ஊராட்சியில் வசிப்பவர் ரவியின் மகன் ராஜ்குமார் (வயது35) இவர் இதே கிராமத்தில் அம்பேத்கர் பகுதியில் வசித்து வந்தார்.

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் இவரது அருகில் உள்ள கிராமத்தைச் சார்ந்த (16 வயது) இளம்பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார் இந்த குற்றத்திற்காக வாலிபர் ராஜ்குமாரை ஆர்.கே.பேட்டை போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு ராஜ்குமாரை போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிபதி உத்தரவின் பேரில் ராஜ்குமாரை புழல் சிறையில் அடைத்தனர். சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!