கல்யாண ராமர் கோயிலில் சிறப்பு அபிஷேக பூஜை வழிபாடு

சிறப்பு அலங்காரத்தில் கல்யாண ராமர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
Kalyana Ramar Temple Special Pooja
அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதை முன்னிட்டு திருத்தணியில் அருள்மிகு கல்யாண ராமர் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் அனுமந்தபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண ராமர் திருக்கோயிலில் உத்தரப் பிரதேச மாநிலம் ஸ்ரீ ராமஜென்ம பூமி அயோத்தியில் ஸ்ரீ ராம திருக்கோயில் பிரதிஷ்ட கும்பாபிஷேகத்தைமுன்னிட்டுசிறப்பு பூஜைகள் திருத்தணி நகரத்தில் உள்ள அனுமந்தபுரம் ஸ்ரீ கல்யாண ராமருக்கு பக்தர்கள் முன்னிலையில் சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சீதா தேவி, லட்சுமணன், மற்றும் ஆஞ்சநேயர், ஆகிய சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
Kalyana Ramar Temple Special Pooja
இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் மற்றும் அரசியல் கட்சியை சார்ந்தவர்களும் மருத்துவர்கள், கலந்துகொண்டு சாமியை வழிபட்டனர்.
இதேபோல் அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோயில் பிரதிஷ்டியை முன்னிட்டு திருத்தணி நகராட்சியில் கீழ் பஜார் பகுதி விநாயகர் திருக்கோயில் இப்பகுதி மக்கள் ஸ்ரீ ராமபிரானின் பக்தி பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu