ஓடும் பேருந்தில் நகை திருடியவருக்கு தர்ம அடி! போலீஸில் ஒப்படைத்த பொதுமக்கள்!

ஓடும் பேருந்தில் நகை திருடியவருக்கு தர்ம அடி! போலீஸில் ஒப்படைத்த பொதுமக்கள்!
X
ஓடும் பேருந்தில் பயணியிடம் நகைகளைத் திருடி தப்பிக்க முயன்ற நபரை ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்தி பிடித்த தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

திருத்தணி அருகே ஓடும் பேருந்தில் பயணியிடம் 7 சவரன் நகைகளைத் திருடி ஓட்டம் பிடித்த நபரை துரத்திச் சென்ற பொதுமக்கள், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று கையும் களவுமாக பிடித்தனர். திருடப்பட்ட நகையை மீட்டு அடித்து உதைத்த பொதுமக்கள்.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே காளஹஸ்தி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் கிருஷ்ணம்மா தம்பதி. இவர்கள் அரக்கோணத்தில் நடைபெற்ற அவர்களது உறவினர்களின் திருமணத்தில் பங்கேற்க காளஹஸ்திலிருந்து திருத்தணிக்கு பேருந்தில் ஏரி பயணம் சென்று கொண்டிருந்தனர்.

பாதுகாப்புக்காக சுந்தரம் டிராயர் பாக்கெட்டில் நகைகள் வைத்திருந்தார். அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த சக பயணி திருத்தணி பைபாஸ் சந்திப்பு பகுதியில் திடீரென்று பேருந்தில் இருந்து இறங்கி ஓடுவதை பார்த்த சுந்தரம் அவரது டிராயர் பாக்கெட்டில் பார்த்தபோது பிளேடால் கிழக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 7சவரன் தங்க நகைகள் பிக் பாக்கெட் அடிக்கப்பட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து பேருந்திலிருந்து இறங்கி கணவன் மனைவி கூச்சலிட்டு கதறியுள்ளனர். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் ஓட்டம் பிடுத்த நபரை சுமார் ஒரு கிலோமீட்டர் விரட்டிச் சென்று கையும் களவுமாக பிடித்து அவரிடம் இருந்து தங்க நகைகள் பறிமுதல் செய்தனர்.

அவரை அடித்து உதைத்து நகைகளைப் பெற்று, உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸாருக்கு பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ‌சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரிடம் நகைகள் பிக்பாக்கெட் அடித்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரனையில் பிக்பாக்கெட் அடித்த நபர் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே ரேணிகுண்டா பகுதியைச் சேர்ந்த ரஜினி என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் திருடிய நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!