திருத்தணி எம்எல்ஏவிடம் பணம் கேட்டு மிரட்டல்: கணவன், மனைவி கைது

திருத்தணி எம்எல்ஏவிடம் பணம் கேட்டு மிரட்டல்:  கணவன், மனைவி கைது
X

கைது செய்யப்பட்ட விஜயகுமார் - யசோதா.

திருத்தணி எம்எல்ஏவிடம் பணம் கேட்டு மிரட்டல்: கணவன், மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருத்தணி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த சந்திரன். இவருக்கு கடந்த 25 ஆம் தேதி விஜயகுமார் என்பவர் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரனை தொலைபேசியில் அழைத்துள்ளார்.

அப்போது, தான் தலைமைச் செயலகத்தில் உள்துறை டிஎஸ்பியாக இருப்பதாகவும், திருத்தணி சட்டமன்ற தொகுதி பிரச்சினை தொடர்பாக புகார் வந்துள்ளது. அந்த புகார் கையில் எடுத்தாள் தாங்கள் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். அதனால் அந்த புகாரை கையில் எடுக்காமல் இருக்க நீங்கள் ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும் என அந்த நபர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரனை மிரட்டியுள்ளார்.

அதற்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் என்ன புகார் என்று அவர்களிடம் திருப்பி கேட்டதற்கு, அது சொல்ல முடியாது எனவும் நேரடியாக நாங்கள் கேட்கும் பணத்தை கொடுத்தால் மட்டுமே அந்த புகார் பற்றி சொல்லப்படும் என அவர் கூறியுள்ளார்.

இந்தப் பிரச்சினை யாராலும் தீர்க்க முடியாது என்றும், அதனால் என்னால் மட்டும்தான் தீர்க்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

27 ந் தேதி அன்று நான் சொல்லும் இடத்தில் பணத்தை கொண்டு வந்தால் உங்கள் பதவியும் காப்பாற்றி கொள்ள முடியும் என்றும் மிரட்டியுள்ளார்.

அதன்படி திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் மட்டுமல்லாமல், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் அவர் பற்றியும் புகார் வந்திருப்பதாகவும் அவரை பணம் கொடுக்க முடிவு செய்து இருப்பதாகவும் அந்த மிரட்டல் கும்பல் சந்திரனிடம் தெரிவித்துள்ளது.

அதற்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், உடனடியாக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயனை தொடர்பு கொண்டு கேட்டபோது, தனக்கு மிரட்டல் வந்தது அதை நான் பார்த்து கொள்வதாகவும் அவர் போனை வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னை மிரட்டி பணம் பறிக்க முயன்ற அந்த நபர் மீது திருத்தணி காவல் நிலையத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து, அந்த நபர்களை திருத்தணியில் உள்ள ஜிஆர்டி கல்லூரி அருகே வரவழைத்து, வெள்ளை தாள்களுடன் பணத்தை மேலே அடுக்கி திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் உதவியாளர் கொடுக்க வைத்துள்ளனர்.

அப்போது அந்த நபர்களை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

விசாரணையில், சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் மற்றும் அவருடைய மனைவி யசோதா என்பது தெரியவந்துள்ளது.

அவர்களிடமிருந்து தலைமைச் செயலகத்தில் டிஎஸ்பி ஆக பணியாற்றுவதைப்போன்ற போலி அடையாள அட்டைகளையும் மற்றும் ரூ.10.ஆயிரம் ரொக்கப் பணம், கார் உள்ளிட்டவைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்ட திருத்தணி நீதிமன்ற நடுவர் கமலா முன் ஆஜர்படுத்தி, யசோதாவை புழல் மத்திய சிறையிலும், அவருடைய கணவர் விஜயகுமாரை திருத்தணி கிளைச் சிறையிலும் அடைக்க உத்தரவிட்டார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்