Income Tax Raid Near Tiruthani திருத்தணி அருகே பள்ளிப்பட்டு பகுதி கல்குவாரியில் வருமான வரித்துறை சோதனை

தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக வருமானவரித் துறையினர் சோதனை செய்தனர்.
Income Tax Raid Near திருத்தணி
தமிழகத்தில் அவ்வப்போது வருமான வரித்துறையினர் திடீர் சோதனை செய்வது வழக்கம். இதன் பின்னணி என பார்க்கும்போது அவர்கள் சமர்ப்பித்த கணக்கு வழக்குகளில் ஏதேனும் குளறுபடி இருக்கும் பட்சத்தில் இதுபோன்ற சோதனைகளை சம்பந்தப்பட்ட துறையானது மேற்கொள்வதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் திருத்தணி அருகே வருமான வரித்துறையினர் கான்ட்ராக்டர் கல்குவாரியில் சோதனை நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பள்ளிப்பட்டு வடகுப்பம் பகுதியில் உள்ள ஆந்திர மாநில அரசுக்கு சொந்தமான மலைப் பகுதியில் எம்.ஜி.லதா என்பவரின் கல்குவாரி செயல்பட்டு வருகின்றது. தமிழகப் பகுதியில் கல் உடைப்பு இயந்திரம் மற்றும் தளவாடங்கள் அமைத்து ஜல்லி, கிராவல் லாரிகள் மூலம் தச்சூர் முதல் சித்தூர் வரை தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது .
இந்நிலையில் வருமானவரித்துறையினர் 10க்கும் மேற்பட்டோர் இரு குழுக்களாக தச்சூர் சித்தூர் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக புண்ணியம் பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ஒப்பந்ததாரர் அலுவலகம் மற்றும் கல்குவாரியில் நேற்று சோதனை மேற்கொண்டனர். இரண்டாவது நாளாக இன்று தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். கல் குவாரி மற்றும் தச்சூர் சித்தூர் தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு அடிப்படையில் நடைபெற்ற திடீர் சோதனையில் பல முக்கிய ஆவணங்களை வருமானவரித் துறையினர் கைப்பற்றியதாக தெரிகிறது. தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu