திருத்தணியில் கள்ளச்சாராயம்! நான்கு பேர் கைது!

திருத்தணியில் கள்ளச்சாராயம்! நான்கு பேர் கைது!
X

திருத்தணி அருகே கள்ள சாராயம் விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது 25 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்.

திருத்தணியில் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அதுதொடர்பாக நான்கு பேரை கைது செய்துள்ளது காவல்துறை

ஆந்திராவிலிருந்து திருத்தணிக்கு கடத்தி வரப்பட்ட 25 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரை காவலர்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயம் கடத்திவரப்பட்டு தமிழக எல்லைப் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சீபாஸ் கல்யாணத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் திருத்தணி காவல்துறையினர் திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நல்லாட்டூர், சிவாடா, நெமிலி, என் என் கண்டிகை, மிட்ட கண்டிகை, அருங்குளம், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மங்கலம் கிராமத்திற்கு செல்கின்ற வழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற கள்ளச்சாராயம் தேடுதல் சோதனையை திருவள்ளூர் மாவட்ட எஸ் பி சீ பாஸ் கல்யாண் நேரில் ஆய்வு செய்தார்.

இந்த சோதனையில் ஆந்திராவில் இருந்து சுமார் 25 லிட்டர் கள்ளச்சாராயம் கடத்தி வந்த திருவள்ளூரை சேர்ந்த கிரிதரன்(25) வேலூர் பேட்டையைச் சேர்ந்த ஹரி(28). சிவாடா காலனியைச் சேர்ந்த வரதராஜ் (40) மிட்ட கண்டிகை சார்ந்த சீனிவாசன்(38). ஆகிய நான்கு பேர் ஈடுபட்டது தெரியவந்தது அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த 25 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!