வி.ஏ.ஓ.வை பணி செய்ய விடாமல் தடுத்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கைது

திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட அருங்குளம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருபவர் சரண்யா.
இவரது கணவர் முரளி. இவர் அ.தி.மு.க.வில் முக்கிய கட்சி பொறுப்பில் இந்த பகுதியில் உள்ளார். இவர் அரசு பணிகளை செய்ய விடாமல் கிராம நிர்வாக அலுவலர்களை மிரட்டும் தோணியில் பேசுவதாக புகார்கள் வந்தன.
இந்நிலையில் மே மாதம் ஒன்றாம் தேதி நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் இல்லையென்றாலும் பரவாயில்லை அவர் தற்காலிகமாக பணி செய்பவர். ஆகையால் கிராம சபை கூட்டத்திற்கு அவர் அவசியம் இல்லை என்று அவரை ஒதுக்கி தீர்மானங்களில் கையெழுத்து போட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆகையால் தற்போது அங்கு கிராம நிர்வாக அதிகாரியாக பொறுப்பு வகித்து வரும் கிராம நிர்வாக அலுவலர் ரகுவரன் என்பவர் கனகம்மா சத்திரம் காவல் நிலையத்தில் முரளி தன்னை அரசு பணி செய்ய விடாமல் தடுப்பதாக புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் முரளியை கனகம்மா சத்திரம் போலீசார் முரளி மீது வழக்குப்பதவு செய்தனர்.இந்நிலையில் இன்று அதிகாலை முரளியை அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பெண் ஊராட்சி தலைவர்களின் கணவர்கள் அரசு பணி செய்யவிடாமல் தடுக்கும் சம்பவங்கள் பல இடங்களில் பரவலாக நடந்து வருகிறது. இங்கு எழுத்து பூர்வமாக புகார் அளிக்கப்பட்டு இருப்பதால் சம்பந்தப்பட்ட நபர் கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu