திருத்தணி கோயிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் ரூபாய் 80 லட்சம்

திருத்தணி கோயிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் ரூபாய் 80 லட்சம்
X

கோவில் ஊழியர்கள், பக்தர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட போது.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியலில் காணிக்க பணம் ரூபாய் 80 லட்சம் எண்ணப்பட்டதாக திருக்கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு 80 லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தி உள்ளதாக திருக்கோயில் நிர்வாகம் தகவல்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் 5-படை வீடாககும். இந்த திருக்கோயில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா மாநிலம், புதுச்சேரி, மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து மலை கோவிலுக்கு வருகின்றனர்.

மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கையாக நகை- பணம், வெள்ளி ஆகியவற்றை செலுத்துகின்றனர்.

இப்படி பக்தர்களால் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட அனைத்தையும் இந்து சமய அறநிலைத்துறையிடம் திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் அனுமதி பெற்ற பிறகு திருத்தணி மலைக்கோவிலில் வசந்த மண்டபத்தில் உண்டியல் பணம் என்னும் பணியினை மேற்கொள்ளப்பட்டது

திருக்கோயில் இணை ஆணையர்/ செயல் அலுவலர் ரமணி தலைமையில் திருக்கோயில் அறங்காவலர்கள் வி. சுரேஷ் பாபு, மு.நாகன், ஆகியோரின் மேற்பார்வையில் உண்டியல் என்னும் பணியில் திருக்கோயில் ஊழியர்கள் திருக்கோயில் தற்காலிக பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள், பக்தர்கள் ஈடுபட்டனர்.

உண்டியல் எண்ணும் பணி முடிவுற்ற பிறகு ரொக்கமாக ரூபாய்- 80, லட்சத்து 7.ஆயிரம் 917 ரூபாயும், 234.கிராம் தங்கம், வெள்ளி-3 கிலோ 456, கிராம் ஆகியவற்றவை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது