கருணாநிதி 3ம் ஆண்டு நினைவஞ்சலி: திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்

கருணாநிதி 3ம் ஆண்டு நினைவஞ்சலி:  திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்
X
கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலியை ஓட்டி திருவள்ளூர் மற்றும் திருத்தணி நகர திமுக சார்பாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. கருணாநிதி 3ம் ஆண்டு நினைவஞ்சலி தினம் திருத்தணி திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எம். பூபதி தலைமையில் நடைபெற்றது.

திருத்தணி திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் நகர பொறுப்பாளர் வி. வினோத்குமார், இணைந்து செய்திருந்த ஏற்பாட்டில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் அன்னதானம் வழங்கினார். முன்னதாக திமுக மாவட்ட அலுவலகம் அருகில் மு. கருணாநிதி படத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினர்

தொடர்ந்து ம.பொ.சி சாலை கமலா திரையரங்கம், பைபாஸ் காந்தி ரோடு, முருகப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கலைஞருடைய முழு உருவ படத்துக்கு திமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் சிகிச்சை பெற்று வரும் தாய்மார்களுக்கு ரொட்டி பழம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!