திருத்தணியில் கடும் போக்குவரத்து நெரிசல்; பக்தர்கள் அவதி
பக்தர்கள் வந்த வாகனங்களால் திருத்தணியில் கடும் போக்குவரத்து நெரிசல்.
திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய படை எடுத்த பக்தர்கள் கடும் போக்குவரத்து நெரிசல் மலைக் கோவிலில் ஏற்பட்டது இதன் எதிரொலியாக மூன்று வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக மோதிக் கொண்டது மூன்று பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முருகப் பெருமான்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை தினம் என்பதால் சுபமுகூர்த்த தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திர, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவு பக்தர்கள் மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
இதன் எதிரொலியாக மலைக் கோவிலில் இருந்து மலை அடிவாரம் வரை இரண்டு கிலோ மீட்டர் தூரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மலைக்கோவிலில் செல்லும் வழியில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய சென்னையை சேர்ந்த வேன் ஒன்று முன்னே சென்ற ஆந்திர மாநில காருடன் மோதி அந்த கார் தமிழகத்தின் மற்றொரு காரின் மீது மோதியதால் மூன்று வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதிக்கொண்டதால் ஆந்திராவைச் சேர்ந்த மூன்று பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சேதம் அடைந்த மூன்று வாகனங்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவத்தின் காரணமாக மலை கோவிலில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மலைக் கோவிலில் சாமி தரிசனம் செய்ய மலை தொடர்ந்து பக்தர்கள் குவிந்து வருவதால் திருத்தணியில் அரக்கோணம் சாலையில் ரயில் நிலைய சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
திருக்கோயில் நிர்வாகம் மற்றும் திருத்தணி போலீசார் பொதுமக்கள் அதிகளவு சாமி தரிசனத்திற்கு வருவார்கள் என்று தெரிந்தும் போதிய முன்னேற்பாடுகள் போதிய கோயில் ஊழியர்கள் பணியிலும் போதிய போலீசார் பணியிலும் அதிக அளவு ஈடுபடவில்லை என்று பக்தர்கள் குற்றச்சாட்டு இதனால் வாகன நெரிசலில் பொதுமக்கள் பக்தர்கள் வாகனங்கள் சிக்கிக் கொண்டு தவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu