திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் கனமழை; நீரில் மூழ்கிய பாலங்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் கனமழை; நீரில் மூழ்கிய பாலங்கள்
X

கிருஷ்ணாபுரம் அணை.

கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து நீர் திறப்பால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழைக்கு அம்மா பள்ளியில் உள்ள கிருஷ்ணாபுரம் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு முதல் வினாடிக்கு 500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் மலைப்பகுதிகளில் இருந்து அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பத் தொடங்கியுள்ளது. குறிப்பாக திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் உள்ள பொதுப்பணித் துறை ஊரக வளர்ச்சித் துறைக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகமானதால் சொரக்காபேட்டையில் இருந்து வெளியூர் செல்லும் தரைப்பாலம், சமந்த வாடா தலைபாரம் ஆகியவைகள் நீரில் மூழ்கியது. கொசஸ்தலை ஆற்றில் வந்துகொண்டிருக்கும் நீரானது நாளை பூண்டி நீர்த் தேக்கத்தை சென்றடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
சும்மா விராட் கோலி மாதிரி ஃபிட்டான வாழ்க்கை வாழணுமா? இதான் டிரிக்ஸ்..!