திருவள்ளூர் மாவட்டத்தில் காரில் கடத்தப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டத்தில் காரில் கடத்தப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்
X

குட்கா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் கைது செய்யப்பட்ட நபர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் காரில் கடத்தப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் களாம்பாக்கம் ஊராட்சியில் மளிகை கடை நடத்தி வருபவர் மாரியப்பன். இவருக்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த யோகேஷ்குமார் என்பவர் 8 மூட்டை ஹன்ஸ் குட்கா பொருட்களை கடைக்கு சப்ளை செய்ய மாருதி காரில் கொண்டு வந்தார்.

250 கிலோ எடையிலான ஹன்ஸ் பாக்கெட்டுகள் இதன் சந்ததை மதிப்பு 2 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. குட்காவை கடத்தி வந்தபோது ரகசிய தகவல் பேரில் காத்திருந்த எஸ். பி வருண்குமார் தலைமையிலான ஸ்பெஷல் டீம் போலீசார் 5 கி. மீ. தூரத்திற்கு துரத்தி சென்று வாகனத்தை மடக்கி சோதனை செய்ததில் குட்கா கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து குட்காவை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!