திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு திருத்தணி வழியாக வந்த இபிஎஸ் க்கு உற்சாக வரவேற்பு

திருப்பதி சென்ற முன்னாள் முதல்வர் இபிஎஸ்க்கு திருத்தணியில் வரவேற்பு அளித்த நிர்வாகிகள் .
திருமலை திருப்பதிக்கு சாமி தரிசனத்திற்கு திருத்தணி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இவருக்கு திருக்கோயில் பிரசாதம் பூக்கள் தூவி பிரமாண்ட வரவேற்பு அளித்தார் அரக்கோணம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகில் உள்ள சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வழியாக சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு திருமலை திருப்பதிக்கு சாமி தரிசனத்திற்கு சென்ற.அ.தி.மு.க பொதுச்செயலாளர், தமிழக முன்னாள் முதல்வர் , எடப்பாடி பழனிச்சாமிக்கு பம்பை மேளங்கள் முழங்க இசைக் கச்சேரியுடன் பெண்கள் மலர் தூவி பிரம்மாண்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டனர். ஆள் உயர மாலை அணிவித்து சால்வை அணிவித்து திருத்தணி முருகன் திருக்கோயில் பிரசாதங்களை வழங்கினார் மேலும் இஸ்லாமிய பெண்களும் திருப்பதி சென்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மலர் தூவி ஆரவாரமாக வரவேற்றனர்.
அரக்கோணம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் திருத்தணி ஹரி இந்நிகழ்வில் பல நிர்வாகிகள் உடன் இருந்தனர்.இந்த வரவேற்பு நிகழ்வை ஏற்றுக்கொண்ட தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாலை மார்க்கமாக தனது குடும்பத்துடன் திருப்பதிக்கு சாமி தரிசனத்திற்கு சென்றுள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu