திருத்தணி அருகே திருமணமான 10 நாட்களில் பெண் தூக்கிட்டு தற்கொலை

புதுப்பெண் அனு.
பள்ளிப்பட்டு அருகே திருமணமான 10 நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பற்றி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வி.ஜி.ஆர்.கண்டிகை காலனியைச் சேர்ந்தவர் ஜே.சி.பி ஓட்டுநர் முத்து (25). அதே கிராமத்தைச் சேர்ந்த அனு(22) என்ற பி.எஸ்.சி பட்டப்படிப்பு முடித்து இருந்தவருடன் முத்துவிற்கு கடந்த 29ம் தேதி கிராமத்தில் உள்ள மணமகன் வீட்டில் திருமணம் நடைபெற்றது. இந் நிலையில்,நேற்று இரவு கணவன் தூங்கிக் கொண்டிருந்த அறையில் அனு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதனை கண்ட அவரது கணவர் முத்து போலீசாருக்கு தகவலை கொடுத்தார்.
திருமணமான 10 நாட்களில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.பொதட்டூர்பேட்டை போலீசார் இறந்தவர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து திருமணம் ஆகி பத்து நாட்களில் பெண் தூக்கிட்டு தற்கொலை எதற்காக செய்து கொண்டார் குடும்ப தகராறா அல்லது வேறு ஏது காரணமா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.
அதே நேரத்தில் திருமணமான பத்து நாட்களில் புதுமணப்பெண் அனு தற்கொலை செய்து கொண்டு இருப்பதால் அவரது சாவிற்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு அதுபற்றிய விசாரணையும் நடைபெற்று வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu