அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்: திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்:  திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் வழங்கல்
X

திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளியில் படிக்கும் 2630 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை திருத்தணி எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ வழங்கினார்

Free Bicycle - திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 2630 பேருக்கு இலவச மிதிவண்டிகளை திருத்தணி எம்எல்ஏ வழங்கினார்

Free Bicycle -திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளியில் படிக்கும் 2630 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை திருத்தணி எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ வழங்கினார்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்குட்பட்ட திருத்தணி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகளை திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் வழங்கினார்.

அதனை தொடர்ந்து திருத்தணி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட திருத்தணி நகரம் டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு அரசு மேல்நிலை பள்ளி திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளி இரா.கி.பேட்டை கிழக்கு ஒன்றியம் வங்கனூர் அரசு மேல் நிலைப்பள்ளி இரா.கி.பேட்டை அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அம்மையார் குப்பம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி , பள்ளிப்பட்டு அத்திமாஞ்சேரிப்பேட்டை மேல்நிலை பள்ளி பள்ளிப்பட்டு பேருராட்சி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளி பொதட்டூர்பேட்டை பேரூராட்சி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய பள்ளிகளில் 2630 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி களை வழங்கினார்.

மேல்நிலைப்பள்ளிகளுடைய கோரிக்கையை ஏற்று அதனை உடனடியாக நிறைவேற்றும் விதமாக பள்ளி மாணவ மாணவிகள் அமர்ந்து பயில்வதற்க்கு ஏதுவாக 30 லட்சம் மதிப்பிலான மேஜை,நாற்காலிகளையும் வழங்கினார்.

.இந்நிகழ்வில் திருத்தணி நகர மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர் வினோத்குமார், மாவட்ட கல்வி அலுவலர் அருளரசு, கூளூர் எம்.ராஜேந்திரன், ஆர்த்தி ரவி, பழனி, சண்முகம், ஜி.ரவீந்திர, சி.ஜெ.சீனிவாசன், ஜோதிக்குமார், டி.ஆர்.கே.பாபு பேரூராட்சி ஒன்றிய ஊராட்சி குழு தலைவர்கள் துணைத் தலைவர்கள் ஆ.சாமிராஜ், மணிமேகலை, திலகவதி ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் விஜயகுமாரிசரவணன், ஆனந்தி செங்குட்வன், ஷியாம் சுந்தர், ரவிகிருஷ்ணன், சுப்பிரமணியம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் தலைமை ஆசிரியர்கள் கழக நிர்வாகிகள் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!