நிச்சயம் செய்த பெண்ணுடன் உல்லாசம்: வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றவர் கைது

நிச்சயம் செய்த பெண்ணுடன் உல்லாசம்: வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றவர் கைது
X

கைது செய்யப்பட்ட வினோத் குமார்.

நிச்சயம் செய்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே நிச்சயதார்த்தம் செய்த பெண்ணை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆற்காடு குப்பம் கிராமத்தில் உள்ள திடீர் நகர் பகுதியில் வசிப்பவர் சுப்பிரமணி இவருடைய மகள் டில்லி ராணி (வயது- 26 )என்பவருக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் முப்பது வெட்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் என்பவரின் மகன் வினோத்குமார் (வயது-29) என்பவருக்கும் கடந்த 2023 ஜனவரி மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த நிலையில் வினோத்குமார் நிச்சயதார்த்தம் செய்த பெண்ணிடம் அடிக்கடி தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு வருங்கால மனைவி என்றும் நீதான் என் உயிர் என்றும் ஆசை வார்த்தைகளை கூறி ஆற்காடு குப்பம் கிராமத்தில் உள்ள டில்லி ராணி வீட்டிற்கு வந்துள்ளார் அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வினோத்குமாரும் டில்லி ராணியும் உல்லாசமாக இருந்துள்ளனர்,

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வினோத்குமார் டில்லி ராணியுடன் தொலைபேசில் பேசுவதை நிறுத்தி உள்ளார் சந்தேகம் அடைந்து டில்லி ராணி வினோத்குமாரின் தங்கை மோகனாவிடம் தொலைபேசி மூலமாக உங்கள் அண்ணன் எங்கே இருக்கிறார் நான் போன் செய்தாலும் எடுக்கவில்லை என்று கேட்டுள்ளார் அதற்கு மோகனா எனது அண்ணனுக்கும் பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நிச்சயம் நடைபெற்று உள்ளது என கூறியுள்ளார்

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த டில்லி ராணி இது குறித்து திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று தன்னை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி உல்லாசமாக இருந்ததாகவும் என்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி ஏமாற்றிய வினோத் குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளார்

இதனையடுத்து வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியில் வினோத் குமார் தலை மறைவாக இருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் வினோத் குமாரை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

Tags

Next Story
ai solutions for small business