திருத்தணி பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது

திருத்தணி பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது
X
திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் திருடப்பட்ட 18 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டது. ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த இருசக்கர வாகன திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 5.பேர் கைது செய்யப்பட்டனர். 18 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் இரு சக்கர வாகன திருட்டு அதிகரித்து வந்தது. இந்த வாகன திருட்டு சம்பந்தமாக பதியப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாச பெருமாள் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவின் பேரில் திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் தலைலையில், ஆர்.கே.பேட்டை காவல்துறை ஆய்வாளர் தர்மலிங்கம்,துணை ஆய்வாளர் குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாசாணை மேற்கொண்டனர்.இதில் இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த சூர்யா ( வயது 23), சிவா( வயது 19), ஆகாஷ் ( வயது 22), ஆறுமுகம் (24) அன்பரசு ( வயது 23) ஆகியோரை விசாரணை செய்ததில் அவர்கள் தான் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து பதிவு எண் நீக்கப்பட்ட 18 இருசக்கர வாகனங்களை போலீசார்பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
why is ai important to the future