தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்றி அமைக்க விவசாயிகள் கோரிக்கை
ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் கைக்கெட்டும் தூரத்தில் மின்சார ஒயர் செல்வதால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனை மாற்றி அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதி, ஆர்.கே.பேட்டை ஒன்றியம் சுந்தரராஜபுரம், சந்திர விலாசபுரம் ஆகிய கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் விவசாயிகள் நெற்பயிர், கத்தரி, வெண்டைக்காய், முள்ளங்கி, சாமந்தி, ரோசா,துள்ளு சாமந்தி பருவத்திற்கு ஏற்ப எப்பா பாப்பா விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த இரு கிராமங்களில் விவசாய மோட்டார்கள் இயங்குவதற்கு நிலத்திற்கு மேல் செல்லும் மின்சார ஒயர் மிகவும் தாழ்வாக செல்வதாகவும், கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பதால் நிலத்தில் இருந்து நெல் மூட்டைகளை தலையில் தூக்கி செல்லும் போதும், விவசாய வேலைகள் மேற்கொள்ளும் போதும் மின்சாரம் பாய்ந்து உயிர் இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து மின்சார வாரியத்திடமும், ஊராட்சி நிர்வாகத்திடமும் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
எனவே இந்த கிராமங்களில் கைக்கு எட்டும் தூரத்தில் செல்லும் மின்சார ஒயரை உயர்த்தி அமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu