திருத்தணி மாஜி கவுன்சிலர் பைக்கை களவாடியவரை காவல்துறை தேடுகிறது

திருத்தணி மாஜி கவுன்சிலர் பைக்கை களவாடியவரை காவல்துறை தேடுகிறது
X
சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில், திருத்தணி மாஜி கவுன்சிலர் நிறுத்தியிருந்த பைக்கை மர்ம ஆசாமி திருடி சென்றுள்ளான்

திருத்தணி கமலேஷ் தெருவை சேர்ந்தவர் நாகூர் பிச்சை, இவர் அதிமுக முன்னாள் கவுன்சிலர். சென்னை திருப்பதி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்று பார்க்கிங் பகுதியில் பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்று திரும்பியபோது பைக்கை காணவில்லை. உடனடியாக அப்பகுதியில் விசாரித்த போது பைக் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

உடனே, திருத்தணி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் திருத்தணி போலீசார் இன்று சம்பவ இடத்திற்கு வந்து அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, கேமராக்கள் பழுதானது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து திருத்தணி திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை இன்று ஆய்வு செய்தனர். அதில் நாகூர் பிச்சையின் பைக் பொன்பாடி சோதனைச் சாவடியில் மர்ம நபர் ஒருவர் ஓட்டி செல்வது பதிவாகி இருந்தது. கடத்தப்பட்ட பைக்கில் ரூ. 8ஆயிரம் மற்றும் கார் சாவி இருந்ததாக நாகூர் பிச்சை தெரிவித்துள்ளார். எனவே புகாரின்படி திருத்தணி காவல் துறையினர் தேடி விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!