'பயப்படாம ஓட்டு போடுங்க' போலீஸ், ராணுவத்தினர் அணிவகுப்பு
திருத்தணி நகர முக்கிய வீதிகளில் தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தினர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனுத் தாக்கல் 12ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி முடிவடைந்துள்ளது. இதனால் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறை மீறல்களை தவிர்க்க தேர்தல் பறக்கும் படையினரும் காவலர்களும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி பாதுகாப்பாக ஓட்டு போடலாம் என்ற பாதுகாப்பு உணர்வை வலியுறுத்த காவல்துறை மற்றும் ராணுவத்தினர் திருத்தணியில் முக்கிய வீதிகளில் அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்பில் துணை ராணுவ படையினர், அதிரடி படையினர், திருத்தணி காவல் துறையினர், மகளிர் காவல் துறையினர் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் திருத்தணியில் எம்.பி.எஸ் சாலை, காமராஜர் சாலை போன்ற முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்றது. பொதுமக்கள் யாரும் அச்சமின்றி வாக்கு பதிவு செய்யவும், தேர்தல் பாதுகாப்பை உணர்த்தவும் அணிவகுப்பு நடைபெற்றது. மேலும் பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தரவும், எந்த தகவலாக இருந்தாலும் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கவும், தேர்தலில் விதிமுறை மீறல்களில் ஈடுபடக் கூடாது எனவும் வலியுறுத்தி அணிவகுப்பு நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu