திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர்: நள்ளிரவில் பரபரப்பு

திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர்: நள்ளிரவில் பரபரப்பு
X

பைல் படம்.

திருத்தணி மருத்துவமனையில் காயமடைந்து வந்த பெண்ணுக்கும் இரவில் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுக்கா அருங்குளம் மோட்டூர் கிராமத்தில் வசிப்பவர் லாரி டிரைவர் நெப்போலியன் (வயது 35) இவரது மனைவி பட்டும்மா (வயது 34) இவர்கள் இருவரும் இதே கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் பகுதியில் புதிய வீடு கட்டி வருகின்றனர்.

இதில் இட பிரச்சினை ஏற்பட்டு இவர்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் நீலகண்டன் மற்றும் ரவிக்குமார் ஆகிய இரண்டு விட்டு குடும்பத்தார் நெப்போலியன் இடம் சண்டையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நெப்போலியன் கட்டிய புது வீட்டை இடித்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட நெப்போலியன் மனைவி பட்டும்மா இவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதனால் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு நெப்போலியன் இவரது மனைவியை பட்டும்மா அழைத்து வந்துள்ளார்.

திருத்தணி அரசு மருத்துவமனையில் இது சண்டை பிரச்சனை காவல் நிலையம் சென்று போலீசார் அனுமதி இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்க முடியும், சிகிச்சை அளிக்க முடியும், இரவு தற்போது அனுமதிக்க முடியாது காலையில் வாருங்கள் என்று இரவு பணியில் இருந்த மருத்துவர் சுமதி என்பவர் கூறியுள்ளார்.

மேலும் இரவு நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது வேண்டுமானால் வராண்டாவில் போய் படுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் அவமரியாதையாக பேசியதாக மருத்துவர் சுமதி மீது பாதிக்கப்பட்ட உறவினர்கள் குற்றச்சாட்டு கூறியதால் நள்ளிரவு பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் மனவேதனை அடைந்த நெப்போலியன் உனது உறவினர்களிடம் சேர்ந்து கொண்டு போலீசாரிடம் கூறி கடும் வாக்குவாதத்தில் நள்ளிரவு மருத்துவமனையில் ஈடுபட்டார்.

அப்போதும் மருத்துவர்கள் மருத்துவமனையில் அவரது மனைவியை சேர்க்காததால் என் மனைவி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார்? பொறுப்பு என்று குற்றச்சாட்டை முன்வைத்து நெப்போலியன் அவரது மனைவியை அழைத்துக் கொண்டு மருத்துவமனையில் இருந்து நள்ளிரவில் வெளியேறினார்.

இந்த சம்பவத்தால் நள்ளிரவில் அரசு மருத்துவமனையில் இரவு மருத்துவர் சுமதியின் அஜாக்கிரதை தான் காரணம் என்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது .

இதே சம்பவம் நடைபெறும் அதே வேளையில் மற்றொரு சம்பவம் ஏற்பட்டு மேலும் பரபரப்பு ஏற்பட்டது அதில் பள்ளிப்பட்டு தாலுகா நொச்சிலி கிராமம் டி.வி. கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த மின்சார ஊழியராக பணியாற்றும் சிவா மற்றும் இவரது மனைவி நதியா. இவர்களது 9-வயது குழந்தை மூச்சுத் திணறல் ஏற்பட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அழைத்து வந்துள்ளனர்.

மருத்துவர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை மேலும் மேல் சிகிச்சைக்கு அழைத்து செல்ல கூறியுள்ளனர் ஆனால் மேல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்கிறோம் என்று இவர்கள் குழந்தையின் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் இந்த மருத்துவமனையில் குழந்தைக்கு அதிகம் மூச்சு திணறல் ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் நள்ளிரவில் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் இல்லாமல் ஒரு மணி நேரம் இருந்துள்ளது.

இதனால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார்? பொறுப்பு ஒரு தலைமை மருத்துவமனையில் இப்படி நள்ளிரவில் ஆம்புலன்ஸ் இல்லாமல் இருக்கலாமா என்று கேள்வி? எழுப்பி இந்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் மருத்துவர் சுமதியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு அந்த குழந்தைக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அந்த குழந்தை தீவிர சிகிச்சை அளிப்பதற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் மேலும் ஒரே இரவில் இரண்டு சம்பவங்கள் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த சுமதி என்ற மருத்துவரின் அஜாக்கிரதையே காரணம் என்று மருத்துவமனையில் இரண்டு தரப்பும் குற்றச்சாட்டு முன்வைத்த சம்பவம் பெரும் பரபரப்பு நள்ளிரவில் ஏற்பட்டது.

அரசு மருத்துவமனையில் நீடிக்கும் இது போன்ற அவல நிலைகளை மாவட்ட நிர்வாகம் கண்டு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!