பள்ளிப்பட்டு ஒன்றிய துணை தலைவராக தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

DMK Tamil | DMK Government
X

பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய துணை தேர்தலுக்கு பின்னர் உறுப்பினர்கள் குழு படம் எடுத்துக்கொண்டனர்.

DMK Tamil -பள்ளிப்பட்டு ஒன்றிய துணை தலைவராக தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

DMK Tamil - திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 12 ஒன்றிய கவுன்சிலர்களில் ஒன்றிய குழு தலைவராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஜான்சிராணி விஸ்வநாதன் பணியாற்றி வருகிறார். பல்வேறு காரணங்களால் மூன்று ஆண்டுகளாக ஒன்றிய குழு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று ஒன்றிய குழு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் சுதா தலைமையில் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் சொரக்காய்பேட்டை தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் பொன்.சு. பாரதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஆதரவாக தி.மு.க.வைச் சேர்ந்த 5 உறுப்பினர்களும் காங்கிரஸ் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் உட்பட 8 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து கூட்டத்தில் பங்கேற்றனர். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சுதா தெரிவித்தார்.

ஒன்றிய குழு துணைத் தலைவராக வெற்றி பெற்ற பொன்.சு.பாரதிக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் திருத்தணி எம். பூபதி, பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.ரவீந்திரா, வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் ஒன்றிய குழு உறுப்பினர்கள் முத்து ரெட்டி, சுகுணா நாகவேலு, நதியா நாகராஜ், உஷா ஸ்டாலின், சேகர் காங்கிரஸ் கவுன்சிலர் பத்மாவதி கோவிந்தராஜ், அதிமுக கவுன்சிலர் முத்துராமன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தி.மு.க. பேரூர் செயலாளர்கள் எம் .ஜோதி குமார், டி. ஆர் .கே. பாபு, திருத்தணி நகர செயலாளர் வினோத்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி. எம். சுகுமாரன் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் துணைத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பாரதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!