பள்ளிப்பட்டில் புதிய நீதிமன்ற கட்டிடம் திறப்பு விழா

பள்ளிப்பட்டில் புதிய நீதிமன்ற கட்டிடம் திறப்பு விழா
X

திருத்தணி அருகே பள்ளிப்பட்டில் புதிய நீதிமன்ற கட்டிடத்தை நீதி அரசர் வேல்முருகன் திறந்து வைத்தார்.

District Court New Building Opening Ceremony பள்ளிப்பட்டில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற புதிய கட்டிடத்தை நீதியரசர்வேல்முருகன் திறந்து வைத்தார்.

District Court New Building Opening Ceremony

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டில மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வாடகை கட்டிடத்தில் 23 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. நீதிமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்ட பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசால் இடம் தேர்வு செய்யப்பட்டு சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் ரூ.5 .27 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணிகள் நிறைவு அடைந்துள்ளது.

வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடுகளுக்கு வசதியாக குளிர்சாதன வசதியுடன் நீதியரசர் அறை நீதிமன்ற வளாகம்,வங்கி சேவை,தபால் சேவை, மருத்துவ வசதி,சட்ட ஆலோசனை மையம்,கைதிகள் தங்கும் அறை,காவலர்கள் ஓய்வு அறை தபால் நிலையம், கழிப்பிடங்கள் உட்பட அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள நீதிமன்ற புதிய நீதிமன்ற கட்டிடத்தின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு நீதியரசர்கள் வேல்முருகன்,முகமது ஷாபீக் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோரை மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபு சங்கர், மாவட்ட முதன்மை நீதிபதி செல்வ சுந்தரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் வரவேற்றனர்.

விழாவில் பள்ளிப்பட்டு உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற புதிய கட்டிடத்தை நீதியரசர் வேல்முருகன் திறந்து வைத்து நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர். நிகழ்ச்சியில் நீதியரசர் வேல்முருகன் பேசுகையில் . மரக்கன்றுகளை நீதியரசர் அடித்தட்டு மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கில் அரசின் கொள்கை முடிவால் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு மாவட்டம் மற்றும் வட்ட தலை நகரங்களில் நீதிமன்ற சேவைகள் கிடைக்கின்றன.

சாதாரண மக்களுக்கும் நீதியை நிலைநாட்டும் வகையில் சட்டத்திற்குட்பட்டு நீதியைக் கொண்டு செல்வது நமது கடமையாக நீதி அரசர்கள், வழக்கறிஞர்கள் கடமையாக செயல்பட வேண்டும் நீதிமன்றத்திற்கு புதிய கட்டிடங்கள் நீதி அரசர்களுக்கோ, வழக்கறிஞர்களுக்கோ, வசதிகள் ஏற்படுத்துவதாக இல்லாமல் அடித்தட்டு மக்களுக்கான சேவைகளுக்கான கட்டிடமாக செயல்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் நீதிமன்றங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வரும் அதே நிலையில் தமிழகத்தில் தற்போது 67 நீதிமன்றங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதாகவும் 39 கட்டிடங்கள் நீதித்துறைக்கு தொடர்பு இல்லாத அரசுத்துறை கட்டிடங்களில் இயங்கி வருவதால், தமிழக அரசு நீதிமன்றங்களுக்கு இடத்தை தேர்வு செய்து அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை கேட்டுக்கொண்டார்.

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 4 நீதிமன்றங்களுக்கு புதிய கட்டிடங்களைக் கட்ட தமிழக அரசு இடத்தை தேர்வு செய்து தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் AI பற்றி நீங்களும்  தெரிந்து கொள்ளுங்கள்!