திருத்தணி அருகே பொதட்டூர் பேட்டை தண்டுமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

திருத்தணி அருகே பொதட்டூர் பேட்டை தண்டுமாரியம்மன் கோவில்  தீமிதி திருவிழா
X
தீ மிதி விழாவில் பங்கேற்ற பக்தர்கள்.
திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டையில் தண்டு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.

திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டையில் தண்டுமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டை பேருராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில் பழமை வாய்ந்த தண்டுமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோவில் சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில் கிராம மக்களின் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர். இதனையடுத்து பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வந்தனர்.


ஞாயிற்றுக்கிழமை காலை அம்மனுக்கு பால், தயிர்,சந்தனம், இளநீர், ஜவ்வாது,தேன்,பன்னீர், குங்குமம்,மஞ்சள், உள்ளிட்ட வாசன திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து பின்னர் வண்ண மலர்களாலும்,பட்டு உடைகளாலும், வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் செய்து மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் கோயில் எதிரில் மலர் அலங்காரத்தில் தண்டு உற்சவர் மாரியம்மன் எழுந்தருள ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவிந்தா முழக்கத்துடன் விரதம் இருந்து காப்பு கட்டிய 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ குண்டத்தில் ஒருவருக்கு ஒருவர் பின் தீயில் இறங்கி தீ மிதித்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர்.

ஆலயத்திற்கு வந்திருந்த திரளான பக்தர்களுக்கு ஆலயம் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் விழா குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!