டீசல் கலப்படம்: முன்னாள் எம்.பி. மீது ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் புகார்

திருவள்ளூர் அருகே பாண்டூர் பெட்ரோல் நிலையத்தில் டீசலில் கலப்படம் செய்தால் பழுதான வாகனத்தின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதில், ஆந்திராவில் இருந்து சென்னை வந்து விட்டு ஆந்திராவிற்கு திரும்பிச் செல்லும் வழியில் இந்த பெட்ரோல் நிலையத்தில் டீசல் நிரப்பி உள்ளனர். டீசல் நிரப்பிக்கொண்டு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சென்ற நிலையில் கார் என்ஜினில் பழுதாகி புகை வந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அனைவரும் காரில் இருந்து அவசர அவசரமாக இறங்கி காரை சோதனை செய்தபோது மண்ணெண்ணெய் வாசனை வந்ததாம்.
இதைத் தொடர்ந்து பெட்ரோல் பங்கு ஊழியர்களிடம் சின்னபாபு ரெட்டி குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது ஊழியர்கள் அவர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சின்னபாபுரெட்டி நடந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கார் பழுதானதால் பெட்ரோல் நிலையத்திலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு இரவு முழுவதும் அங்கேயே தங்கி உள்ளனர்.
மறு நாள் காலையில் முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி அங்கு பெட்ரோல் பங்க் -க்கு சென்று சின்னபாபு ரெட்டி குடும்பத்தினரை மிரட்டும் தொனியில் பேசினாராம். மேலும் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களையும் மிரட்டி அவர்களது செல்போன் கேமராவை பறித்துச்சென்றார். இந்த காட்சி பதிவான வீடியோ வெளியானதால் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினரிடம் மிரட்டும் தொனியில் பேசியதும் செய்தியாளர்களிடம் செல்போன் பறித்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu