திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை - ஆட்சியர் தகவல்
பைல் படம்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம் திருத்தணி நகரில் மலைக் கோயிலில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர விழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆடிப்பூர விழாவில் சென்னை மாநகர் மற்றும் பழவேற்காடு மீனவ சமுதாய மக்கள் மற்றும் இதர பொதுமக்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி, புஷ்பக் காவடிகள் எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கத்தில் உள்ளது.
இந்த ஆண்டு 11.8.2021 முதல் ஆடி பூரம் திருவிழா நடைபெற்றால் வழக்கம் போல், 10.8.201 இரவு முதல் 11.8.2021 வரை லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள். இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நலன் கருதியும் நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வகையிலும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் உப கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்திடவும், காவடிகள் எடுக்கவும் அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu