திருத்தணி அருகே பழுதடைந்த பள்ளி அங்கன்வாடி கட்டிடங்களை அகற்றி புதிதாகக் கட்டித்தரக் கோரிக்கை

திருத்தணி அருகே பழுதடைந்த பள்ளி அங்கன்வாடி கட்டிடங்களை அகற்றி புதிதாகக் கட்டித்தரக் கோரிக்கை
X
அதிகாரிகள் இப் பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்து தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது

ஆபத்தான நிலையில் உள்ள அரசு பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடம் கட்ட அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகாவிற்கு உட்பட்ட முத்துக் கொண்டாபுரம் கிராம பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டிடம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடங்கள் 2015 மற்றும் 2016ஆம் ஆண்டு ரூ.40.ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளி மேற்கூரை சரி செய்யப்பட்டு, தற்போது வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதே பகுதியில் மற்ற ஒரு பள்ளி கூடுதல் கட்டிடம் 2005 -ஆம் ஆண்டில் 3.லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.

இந்தப் பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் கட்டிடமும் இயங்கி வருகிறது. இதனை அடுத்து இந்த 3 கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து சுவர்களில் விரிசல் ஏற்பட்டு. ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் மழைக்காலம் தொடங்கிவிட்டால் மழைநீர் வகுப்பறை உள்ளே புகுந்து விடுவதாால் ஆசிரியர்களும் மாணவர்களும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் அதிகாரிகள் இப் பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்து தற்போது வரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, ஆபத்து விளைவிக்கும் முன்பே இந்த பழுதடைந்த கட்டிடங்களை அகற்றி விட்டு, புதிய பள்ளி. மற்றும் அங்கன்வாடி மைய கட்டிடங்களை கட்டித் தரவேண்டும் என பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் என பல தரப்பட்ட மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!